பிரதமர் பதவி... காங். கூட்டணியில் எந்தத் தலைவருக்கும் ஆதரவு தராத வாசகர்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஏற்ற வேட்பாளர் யார் என்ற கருத்துக் கணிப்பை ஒன் இந்தியா தமிழ் நடத்தியது. அதில் நரேந்திர மோடிக்கு ஏகோபித்த ஆதரவை ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர் பதவிக்கு ஏற்றவர்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான முடிவைக் கொடுத்துள்ளனர் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்.
இந்தக் கேள்வியில், காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு ஏற்றவர்கள் ராகுல் காந்தியா, கருணாநிதியா, ப.சிதம்பரமா, பிரியங்கா காந்தியா, மன்மோகன் சிங்கா, சோனியா காந்தியா, முலாயம் சிங் யாதவா, மாயாவதியா, சரத் பவாரா அல்லது வேறு யாரேனுமா என்ற வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன.
இந்த கருத்துக் கணிப்புக்கு 36 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 68 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் யாருமே முதலிடத்தை எந்தத் தலைவருக்கும் தரவில்லை. மாறாக, இந்தத் தலைவர்களைத் தவிர வேறு யாரேனும் வரலாம் என்று வாக்களித்துள்ளனர். அப்படி வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 45.6 சதவீதம் பேர் ஆவர். அதாவது 9156 பேர்.
2வது இடம் ராகுல் காந்திக்குக் கிடைத்துள்ளது. அவருக்கு 14.8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி 3வது இடத்தில் இருக்கிறார். அவருக்குக் கிடைத்த ஆதரவு 12.1 சதவீதமாகும்.
ப.சிதம்பரத்திற்கு 10.7 சதவீதமும், பிரியங்கா காந்திக்கு 4.5 சதவீதமும், மன்மோகன் சிங்குக்கு 4.3 சதவீதமும், சோனியா காந்திக்கு வெறும் 2.9 சதவீதமும், கூட்டணிக்கு மாயாவதி ஒரு வேளை வந்தால் அவருக்கு 2.7 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
அதேபோல முலாயம் சிங் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்தால் அவரை பிரதமராக தேர்ந்தெடுக்கலாம் என்று 1.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவாருக்கு வெறும் 0.8 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications