சென்னையில் மாணவருக்கு அரிவாள் வெட்டு- தவறுதலாக இன்னொரு கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதால் பதற்றம்
சென்னை: சென்னையில் மாணவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் கத்திகளுடன் மோதிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது. மாநிலக் கல்லூரி மாணவர்களின் இருபிரிவினர் மோதிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போது லயோலா மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
சென்னை பட்டாபிராமிலிருந்து அண்ணாசதுக்கத்துக்கு 27 ஹெச் பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த பச்சையப்பா கல்லூரியைச் சேர்ந்த பாலமுரளி என்ற மாணவரை ஒரு கல்லூரி மாணவர்கள் கோஷ்டி அரிவாளால் வெட்டியியிருக்கிறது.
இதற்குப் பதிலடியாக அதே பேருந்தில் பயணம் செய்த லயோலா கல்லூரியைச் சேர்ந்த முருகேசனை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் போலீசுக்குப் போனது.
அமைந்தகரை போலீசார் இது பற்றி விசாரித்த போது , பச்சையப்பன் கல்லூரி பாலமுரளியை வெட்டியது மாநிலக் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி என்றும் தவறுதலாக லயோலா கல்லூரியைச் சேர்ந்த முருகேசன் தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவர் முருகேசனைத் தாக்கியதாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்களை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த தகவல் பரவியதும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 100 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு அமைந்தகரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மாணவர் இருவரையும் விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பிடித்து வைத்திருந்த 2 மாணவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.
இதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாலமுரளி மற்றும் முருகேசன் ஆகிய இருவருமே அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு மேலும் பதற்றம் நிலவியது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநிலக் கல்லூரிகளுக்கும் ஏற்கெனவே... முன்விரோதம்.. இப்பொழுது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் லயோலா கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்... சென்னை போர்க்களமாகமாக இருந்தால் சரி!
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications