உதயகுமாரை கைது செய்யக்கோரி காங்கிரஸ் சாலை மறியல்: 15 பேர் கைது
ராஜபாளையம்: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்யக்கோரி ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர் தலைமையில் 15 பேர் காங்கிரஸ் கொடியுடன் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவின் சாலையின் குறுக்கே படுத்தும், அமர்ந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் உதயகுமாரை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்று முன் அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications