டீசல், கேஸ் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிக்கும்: கி.வீரமணி அறிக்கை
சென்னை: டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவி்த்துள்ளார்.
இது குறி்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேற்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 ஏற்றி அறிவித்துள்ளது மத்திய அரசு. அத்துடன் வீட்டு உபயோகத்திற்கென உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆறு மட்டுமே ஒரு ஆண்டுக்கு அனுமதி! (அதாவது 30 நாளுக்கு அரை சிலிண்டர்தான்!) மீறி ஏழாவது சிலிண்டர் மற்றும் கூடுதல் சிலிண்டர்களைப் பயன்படுத்தினால் மேற்கொண்ட ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ. 770 அளவில் கொடுத்து வாங்க வேண்டும். இதன்படி ஊடகங்கள் கூற்றுப்படியே மாதம் ஒன்றுக்கு ரூ.2,220 - அதாவது 50 விழுக்காடு செலவு கூடுதலாகும். திராவிடர் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதைவிட ஏழை, எளிய, நடுத்தர, வியாபாரிகள், விவசாயிகள், குடும்பத் தலைவிகள் ஆகியோரது வாழ்வின் முதுகெலும்பை முறிக்கும் கொடுமை வேறு உண்டா?
விவசாயிகள், தொடரும் மின்வெட்டு காரணமாக பம்ப் செட்டுகளை இயக்க டீசல் என்ஜின்களைத் தான் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 ஏற்றம் என்றால் இது விவசாய உற்பத்தி உட்பட பல தரப்பட்ட மக்களுக்குச் சுமை- அதுவும் தாங்க முடியாத சுமையாக ஆகிவிடாதா?
மத்திய ஆட்சியாளர்கள் கூட்டணி அரசு என்ற போதிலும்கூட, கட்சித் தலைவர்களை கலந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்கும் ஓர் ஆரோக்கிய அரசியலை நடத்தாமல், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக முடிவு எடுப்பது சரிதானா? (அமைச்சரவை முடிவு என்பது சரியான சமாதானமாகாது)
திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அதன் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டாமா?
எல்லாவற்றிலும் இப்படி ஒரு முடிவைத் திணிப்பது, பொது மக்களிடத்தும் சரி, கூட்டணியிலும் சரி அக்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் பெரியண்ணன் மனப்பான்மை ஆகாதா? ஆளும் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்.
இல்லத்தரசிகளின் கோபாக்கினியில் சிக்கி, மீண்ட அரசுகள் உண்டா? சிந்திக்க வேண்டும் - மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சித் தலைமை.
இத்தகைய விபரீத யோசனைகளைக் கூறும் அதிகார வர்க்கத்திற்கும், வெகு மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மேலும் அந்த உயர் அதிகார வர்க்கம் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக செயற்பாடுகளை இவர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கி, இந்த ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக்கும் பணியில் உள்ளதாகவே தெரிகிறது. அதற்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதன் தலைமையும், இரையாகலாமா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications