கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: 2-வது நாளாக கடலுக்குள் இறங்கும் போராட்டம் -சி.பி.எம். ஆதரவு
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்குள் இறங்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில் போராட்டம் நடத்திய கூடங்குளம் சுற்றுவட்டார பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டம் வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடாக மாறியது.
இதைத் தொடர்ந்து 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் நேற்று முதல் கடலுக்குள் இறங்கும் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
முதல்நாளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒட்டுமொத்த கிராமங்களும் கலந்து கொண்டன. இன்றைய போராட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து கடலுக்குள் இறங்கியுள்ளனர். இதேபோல் திருநெல்வேலி வழக்கறிஞர்களும் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்த வந்துள்ளனர்.
ஆனால் நேற்றுபோல் இன்று கடற்படையின் கண்காணிப்பு விமானம் வானில் பறக்கவில்லை. வழக்கமாக நிறுத்தப்படும் கடலோரக் காவல்படையின் கப்பல் மட்டும் நிறுத்தப்பட்டிருக்கிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications