விதி மீறிய 5 பட்டாசுத் தொழிற்சாலைகள் உரிமங்கள் ரத்து: கலெக்டர் நடவடிக்கை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 5 பட்டாசு தொழிற்சாலைகளுடைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே முதலிபட்டியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.09.12 அன்று ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 689 பட்டாசு தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பட்டாசு தொழில் தொடர்புடைய துறைகளான வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள் தொழிலாளர் நலத்துறை, மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த அலுவலர்களைக்கொண்டு குழுக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு கடந்த 10.09.12 முதல் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 88 பட்டாசு ஆலைகளிலும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட 601 பட்டாசு தொழிற்சாலைகள் உட்பட 689 பட்டாசு தொழிற்சாலைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
12.09.12 வரை மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 31 பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட 16 பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் அதிகாரிகள் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர் ஹரிஹரன் பேசியதாவது :
12.09.12 வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 41 பட்டாசு தொழிற்சாலைகள் வெடிபொருள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தால் உரிமம் வழங்கப்பட்ட 30 பட்டாசு ஆலைகளுக்கும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட 11 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 ஆலைகள் உரிமம் ரத்து
மேலும் வெடிபொருள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சிவகாசியில் உள்ள ஓவியா பட்டாசு தொழிற்சாலையினையும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் வழங்கப்பட்ட அனுப்பன்குளத்தில் உள்ள சிவராஜ் பட்டாசு தொழிற்சாலை, பானையடிப்பட்டியில் உள்ள பரணி பட்டாசு தொழிற்சாலை, சுப்பரமணியாபுரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா பட்டாசு தொழிற்சாலை, மற்றும் பாறைபட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா பட்டாசு தொழிற்சாலை, குண்டாயிருப்பில் உள்ள ராம்சன் பட்டாசு தொழிற்சாலை ஆகியவற்றின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறியுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications