அடடே, ஆதீனத்துக்கு இதுக்குக் கூட நேரம் இருக்கே...!

முன்பெல்லம் ஆதீனம் தமிழகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவார். போராட்டங்களில் பங்கேற்பார். குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து கூட பலமுறை போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
ஆனால் நித்தியானந்தாவின் வட்டத்துக்குள் போன பின்னர் அவருக்கு அவரைப் பற்றியே சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டது. சதா, நித்தியானந்தா விவகாரம் அவரை இழுத்தடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் முதல் முறையாக பொதுப் பிரச்சினை ஒன்று குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் ஆதீனம்.
கூடங்குளம் விவகாரம் குறித்து அவர் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கூடங்குளம் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றால், அணுமின் நிலையம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக முதல்வரின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், தமிழக அரசுக்கு எவ்விதத் தொல்லையும், துன்பமும் இல்லாமல் அமைதியான வகையில், அணுமின் நிலையம் இயங்க உறுதுணை புரிய முடியும்.
உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தக்க ஆதரவு கொடுத்திருக்கும் இத்தருணத்தில், எல்லோரும், சிந்தித்து அமைதி காத்திட வேண்டிய நேரமிது. அணுமின் நிலையத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் அதனை சுற்றிக் குடியிருப்போருக்கும், மீனவர்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என அணு விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஆய்வு செய்து, வாக்குறுதி தந்துள்ளனர்.
அதுபோல குடிநீருக்கும் எவ்விதப் பதிப்பும் கிடையாது எனத் தெளிவுபடுத்தி உள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, ஜெய்தாபூர், கல்பாக்கம் போன்ற அணுமின் நிலையங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே நாட்டின் நலன் கருதி அணுமின் நிலையத்தை சிறப்பாக இயக்குவதற்கு, அதன் எதிர்ப்பாளர்களும், அவர்களை ஆதரிக்கின்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என நாட்டின் நலன் கருதி வேண்டுகோள் வைக்கின்றோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்கின்ற மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய அரசு ஒரு உறுதிப்பாட்டை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழக முதல்வர் கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவரது கோரிக்கையை, மத்திய அரசு உடனடியாகச் செவி சாய்த்து தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை நீக்கிட ஆவண செய்யுமாறு வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார் ஆதீனம்.
இன்று கோர்ட்டுகளின் உத்தரவுகளை மேற்கோள் காட்டி அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் இதே ஆதீனத்தின் வாய்தான், சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டுகளின் உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது, ஆதீனங்கள் கோர்ட்டுகளுக்கெல்லாம் போக முடியாது என்று கூறியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications