மாறுவேடத்தில் உதயகுமார் உள்பட 4 பேரைத் தேடி அலையும் போலீசார்
கூடங்குளம்: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், ஜேசுராஜ் ஆகியோரை கைது செய்ய போலீசார் மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று 2வது நாளாக கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளத்தில் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதன் பிறகு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார்.
இந்நிலையில் மறுநாள் இடிந்தகரை வந்த அவர் அன்று இரவு கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையப் போவதாக அறிவித்தார். ஆனால் அவரை சரணடையவிடாமல் அவரது ஆதரவாளர்கள் அவரை படகில் ஏற்றிச் சென்று ஊத்தங்குழியில் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் அவர் சரணடைவதை விரும்பாததால் அவர் சரணடைய மாட்டார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையே வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், ஜேசுராஜ் ஆகியோரை கைது செய்வதில் போலீசார் முனைப்பாக உள்ளனர். இதையடுத்து அவர்கள் மாறுவேடத்தில் கூடங்குளத்திற்கு அருகில் உள்ள கடற்கரை கிரமாங்களில் அவர்களைத் தேடி வருகின்றனர்.
கூத்தங்குழிக்குள் போலீசார் நுழையாமல் இருக்க ஊரைச்சுற்றி அக்கிராம மக்கள் நாட்டு வெடிகுண்டுகளை புதைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications