16ம் தேதி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் கூடி பிரமாண்ட போராட்டம் நடத்த முடிவு
தூத்துக்குடி: கூடங்குளம் போராட்டத்தின் அடுத்தகட்டமாக தூத்துக்குடியில் 16ம் தேதி ஆயிரக்கணக்கானோரைக் கூட்டி பெரும் போராட்டம் நடத்த அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதில் மீனவர்கள், கிராம மக்கள் என பல தரப்பட்டவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களில் கிராம மக்கள் குதித்துள்ளனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பதட்ட நிலை காணப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்த விதம் கிராம மக்களிடையே பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் கொல்லப்பட்டதும், சிறுமி ஒருத்தி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதும் அப்பகுதி மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி பனிமலை மாதா ஆலயம் முன்பு செப்டம்பர் 16ம் தேதி பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதில் மீனவர்கள், கிராமத்தினர் என சகல தரப்புகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications