தண்ணீரில் நின்று தத்தளிக்கும் மக்களை முழுமையாக மூழ்கடித்து விடும்-விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக டீசல் விலையை ஏற்றியதோடு நில்லாமல், வருடம் ஒன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்தான் என்கின்ற புதிய கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
எந்த ஒரு குடும்பமும் இந்த 6 சிலிண்டர்களுக்குள் வருடம் முழுவதும் தங்கள் சமையல் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் வாழ வழி தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இந்த டீசல் விலை உயர்வோடு, வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 6 சிலிண்டர் என்ற கட்டுப்பாடு என்பது, ஏற்கனவே கழுத்தளவு தண்ணீரில் நின்று தத்தளிக்கும் மக்களை முழுமையாக மூழ்கடித்து விடும்.
எனவே காலம் தாழ்த்தாது உடனடியாக இந்த டீசல் விலை உயர்வையும், சிலிண்டர் கட்டுப்பாட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications