சர்ச்சைக்குரிய தீவுப் பகுதியில் சீனாவின் கப்பல்கள் - இருநாடுகளின் பரஸ்பர எச்சரிக்கையால் பதற்றம்
டோக்கியா : கிழக்கு சீனக் கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீ வுப் பகுதிக்குள் 6 சீன வேவுக் கப்பல்கள் சென்றுள்ளதால் அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் வேவுக் கப்பல்களை ஜப்பான் எந்த நேரத்திலும் தாக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் உள்ளது தியாவ்யூ தீவு. இத்தீவில் இயற்கை எரிவாயு வளம் அதிகம் இருப்பதால் சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருப்பினும் இத்தீவு தனியார் ஒருவருக்குச் சொந்தமானது. இதனால் ஜப்பான் அண்மையில் இந்தத் தீவை விலை கொடுத்து வாங்கி தமது நாட்டோடு இணைத்துக் கொண்டது.
ஆனால் சீனாவோ, தியாவ்யூ தீவுப் பகுதி தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும் சீனா நாட்டின் ஒரு பகுதி என்று கூறியது .அத்துடன் தியாவ்யூ தீவுப் பகுதிக்கு 6 வேவு கப்பல்களையும் அனுப்பியிருந்தன. இந்தக் கப்பல்கள் இன்று தியாவ்யூ தீவுப் பகுதியில் நுழைந்திருக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் சீனா முறையிட்டிருந்தது.
ஜப்பான் நாட்டு கப்பல்களும் சீனாவின் கப்பல்களும் தியாவ்யூ தீவுப் பகுதியில் நின்று கொண்டு இருதரப்பினரும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் தியாவ்யூ தீவுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications