தமிழகம் முழுவதும் கோலாகலமாக அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம்
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 104வது பிறந்தநாளையொட்டி சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் அண்ணாவின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே, அண்ணாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. காலை 7.40 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி அங்கு வந்தார். அவருக்கு திமுக இளைஞர் மற்றும் தொண்டர் அணியினர் திமுகவின் ஐம்பெரும் முழங்கங்களை எழுப்பி அணிவகுத்து வரவேற்றனர். பின்னர், கருணாநிதி அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்துக்கு மலர் துவி மரியாதை செலுத்தினார். பின்னர், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கழக அவைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், எம்.எல்.ஏ., மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.