ஆருஷி கொலை வழக்கு: தாய் நுபுருக்கு ஜாமீன், 25ல் தான் விடுதலை

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி நொய்டாவில் பல் மருத்துவர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரின் 14 வயது மகள் ஆருஷி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்த மறுநாள் அவர்கள் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜின் உடல் அதே வீட்டு மாடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ராஜேஷ் தல்வார் ஜாமீனில் வெளியே உள்ளார். நுபுர் தல்வார் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்டு காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டார்.
தல்வார்கள் சாமர்த்தியமாக கொலையை செய்துவிட்டு சாட்சியங்களை அழித்துவிட்டதாக அவர்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சிறையில் இருந்த நுபுர் தல்வார் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது.
ஆனால் சிபிஐ இன்னும் 2 சாட்சியங்களை விசாரிக்கவிருப்பதால் நுபுர் வரும் 25ம் தேதி வரை சிறையில் தான் இருப்பார். சாட்சியங்களை விசாரித்த பிறகே நுபுர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார். இடையே வெளியேவி்ட்டால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்று சிபிஐ கருதுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications