நிதிஷ்குமாரை வெற்றுப்பேற்றும் பாஜகவின் மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும் குஜராத் முதல்வர் மோடிக்கும் ஏழாம் பொருத்தம். மோடியை பிரதமர் வேட்பாளராக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் நிதிஷ்குமார். மேலும் மோடியை வெறுப்பேற்றும் விதமாக குஜராத் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் நிதிஷ்குமார் பிரச்சாரத்துக்கு வரப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று குஜராத்தில் மட்டுமின்றி பீகாரிலும் அமர்க்களப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராகி நாளையுடன் 4 ஆயிரம் நாள் நிறைவடைகிறது. ஏற்கெனவே மோடியை குடைந்தெடுத்து வரும் நிதிஷ்குமாரை கடுப்பேத்தும் வகையில் பீகார் மாநில பாஜகவினர் களத்தில் குதித்திருக்கின்றனர்.
பீகார் மாநிலம் முழுவது மோடியின் பிறந்த நாளை மிகவும் அமர்க்களமாகக் கொண்டாடி வருகின்றனர் பாஜகவினர். பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரது பிறந்த நாள்தான் மாநிலங்களில் கொண்டாடப்படும். இப்பொழுது மோடியின் பிறந்த நாள்தான் மாநிலம் விட்டு மாநிலம் கொடாடப்படுகிறது. பீகாரில் முதல் முறையாக மோடியின் பிறந்தநாள் இப்பொழுதுதான் கொண்டாப்படுவது குறிப்பிடத்தக்கது.
பீகார் தலைநகர் பாட்னா நகர் முழுவதும் நரேந்திர மோடியின் பேனர் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவில், நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரி கிரிராஜ் சிங். மாநில பாரதிய ஜனதா தலைவர் சி.பி.தாக்கூர் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications