சிங்கள படைக்கு பயிற்சி: கோவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு கறுப்புக் கொடி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: இந்தியாவில் சிங்கள படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு கோயம்புத்தூரில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது.
கோவை வருகை தந்த நாராயணசாமிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கறுப்புக் கொடி காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் சிங்கள படையினருக்கு பயிற்சி கொடுக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கறுப்புக் கொடி காண்பிக்கப்படும் என்று தந்தை பெரியார் தி.க. எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications