சென்னையின் 98வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றார் ஜார்ஜ்

சென்னை காவல்துறை ஆணையராக இருந்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று திடீரென மாற்றப்பட்டார். சென்னையில் அமெரிக்காவைக் கண்டித்து இஸ்லாமியர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக திரிபாதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதிய காவல்துறை ஆணையராக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஜே.கே.திரிபாதி விடை பெற்றார். திரிபாதி, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாகியுள்ளார்.
சென்னை நகரில் ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்தான் ஜார்ஜ். சென்னை வடக்கு மண்டல ஐஜி, மத்திய மண்டல ஐஜி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை நகர காவல்துறையின் 98வது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஜார்ஜ்.
கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜார்ஜ் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications