மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்: டெல்லியில் முலாயம், பரதன், காரத். சந்திரபாபு நாயுடு கைது

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் இடதுசாரிகள் தலைமையில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளும் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடத்தின.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இடதுசாரித் தலைவர்களுடன் காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாதியின் கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவும் கலந்து கொண்டார்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கையோடு, நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றதால் இடதுசாரித் தலைவர்கள் ஏபி பரதன், சீத்தாரம் யெச்சூரி, பிரகாஷ் காரத், முலாயம்சிங் யாதவ், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரும் ஜந்தர் மந்தர் பகுதியில் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications