மதுரையில் வரலாறு காணாத பந்த் -100 சதவீத வெற்றி!

பாரத் பந்த்துக்கு மதுரையில் இன்று பெருத்த ஆதரவு காணப்பட்டது. 100 சதவீத அளவுக்கு வெற்றி என்று சொல்லும் அளவில் அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மதுரையின் முக்கிய அங்கங்களில் ஒன்று டீக்கடைகள். ஆனால் இன்று மதுரையில் ஒரு டீக்கடையைக் கூட காண முடியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அத்தனை கடைகளும் மூடப்பட்டிருந்தன.
சாதாரண தள்ளுவண்டிக் கடைகளையும் கூட காண முடியவில்லை. காலையிலேயே மதுரை மக்களை தட்டி எழுப்பும் சாலையோர இட்லிக் கடைகள், இடியாப்பக் கடைகளையும் கூட காண முடியவில்லை.
காய்கறிக் கடைகள் இல்லை, மருந்துக் கடைகளும் மூ்டப்பட்டிருந்தன. எந்தத் தொழில்நிறுவனமும் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமே ஓடின. மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே ஓடின.
மதுரை நகரமே கிட்டத்தட்ட வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த பந்த் குறித்து வர்த்தக அமைப்பினர் கூறுகையில், மதுரை வரலாற்றில் பந்த் ஒன்றுக்கு 100 சதவீத ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு அனைத்து வர்த்தகர்களும் கடைகளை, நிறுவனங்களை மூடி மத்திய அரசுக்குத் தங்களது எதிர்ப்புகளைக் காட்டியுள்ளனர் என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications