முதலிரவில் வெறித்தனம்.. கை, கால்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த கணவர் கைது!
திருச்சி: திருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந்த நபரின் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரையும் இப்போது போலீஸார் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த புதுப் பெண்ணை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்பெண்ணின் சிறுநீர்ப் பாதையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 30 வயதான இவருக்கும், நாகப்பட்டனத்தைச் சேர்ந்த நிர்மலாவுக்கும் திருமணம் நடந்தது. செப்டம்பர் 12ம் தேதி திருமணம் முடிந்ததும், அன்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.
அன்று இரவு வெங்கடேசனும், நிர்மலாவும் அறைக்குள் தனிமையில் விடப்பட்டனர். வெங்கடேசன் முதலிரவை சிறப்பாக கொண்டாட தயார் நிலையில் இருந்தார். ஆனால் நிர்மலா பெரும் பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் கணவரை தன்னிடம் அண்ட விடவில்லை. ஆனால் வெங்கடேசன் படு வேகமாக நிர்மலாவை நெருங்குவதிலேயே குறியாக இருந்தாதல் பயந்து அலறியுள்ளார் நிர்மலா.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், உடனே தனது அக்காள் வெங்கடேஸ்வரிக்குப் போன் போட்டு என்ன செய்வது என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேஸ்வரி சற்று பொறுமையாக இருக்குமாறு அட்வைஸ் செய்தாராம்.
அதன் பின்னர் வெங்கடேஸ்வரி, நிர்மலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார். பிறகு மணமகனின் வீட்டில் இன்னொரு முதலிரவுக்கு ஏற்பாடு செய்வது என்று தீர்மானித்துள்ளனர். அதன்படி செப்டம்பர் 17ம் தேதி வெங்கடேசன் வீட்டில் மறுபடியும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.
17ம் தேதி இரவு நிர்மலாவை அறைக்குள் அனுப்பி வைத்தனர். இப்போதும் நிர்மலா தனது கணவரை நெருங்க விடவில்லை. இதையடுத்து தனது அக்காளை மறுபடியும் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டார் வெங்கடேசன். இரு வருகிறேன் என்று கூறிய வெங்கடேஸ்வரி, முதலிரவு அறைக்குள் நுழைந்தார். அங்கு நிர்மலாவை கட்டாயப்படுத்தி பிடித்து அவரது கைகளையும், கால்களையும் கட்டிலோடு சேர்த்துக் கயிற்றால் கட்டினார். பின்னர் வெங்கடேசனிடம் இப்போது போ என்று கூறி விட்டு வெளியேறியுள்ளார்.
கட்டி வைக்கப்பட்ட நிர்மலாவை ஏதோ விலங்கு வேட்டையாடுவதைப் போல நெருங்கிய வெங்கடேசன் உறவுக்கு முயன்றுள்ளார். ஆனால் கூக்குரலிட்டு அலறிய நிர்மலா, வெங்கடேசனை ஓங்கி உதைத்துள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேசன், மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார். அவரது தாறுமாறான உறவால், ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார் நிர்மலா.
அவரது சத்தம் கேட்டு கதவைத் திறந்து உள்ளே வந்த வெங்கடேஸ்வரி, நிர்மலா ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதற்குள் நிர்மலா வீட்டுக்குத் தகவல் போனது. அவர்கள் போலீஸில் புகார் கொடுத்து விட்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வெங்கடேசனையும், வெங்கடேஸ்வரியையும் கைது செய்தனர்.
தற்போது தீவிர சிகிச்சைக்குள்ளாகியுள்ள நிர்மலாவுக்கு சிறுநீர்ப் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications