பள்ளி வேன் ஏறி ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப மரணம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பின்னால் நின்று கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் மீது பள்ளிக்கூட வேன் ஏறியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
தமிழகத்தில் பள்ளிக்கூட வேன், பஸ்கள் மோதி சிறார்கள் பலியாகி வருவது தொடர்கதையாகி விட்டது. தினந்தோறும் இப்படி ஒரு சம்பவம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பழனியில் இன்று காலை ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. பழனி நேதாஜி நகரில் இன்று காலை தனது அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப ஒன்றரை வயது சிறுவன் ஹரிகிருஷ்ணன், தனது தாயாருடன் சென்றான். அப்போது தனது மூத்த மகனை வேனில் ஏற்றி விடுவதற்காக ஹரிகிருஷ்ணனை இடுப்பிலிருந்து கீழே இறக்கி நிறுத்தி வைத்தார் தாயார்.
அப்போது சிறுவன் பள்ளிக்கூட வேனுக்குப் பின்னால் போயுள்ளான். அங்கு போய் நின்று வேடிக்கை பார்த்துள்ளான். இதை அறியாத வேன் டிரைவர் ஜாபர் வேனை பின்னால் ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது சிறுவன் ஹரிகிருஷ்ணன், வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து டிரைவர் ஜாபரைக் கைது செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications