புதுச்சேரியில் ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாரத் பந்த்துக்கு ஓரளவு நல்ல ஆதரவு காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோக்கள் ஓடவில்லை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று பாரத் பந்த் நடந்தது. இதையடுத்து அங்கு அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. இருப்பினும் கூட்டம் அதிகம் இல்லை. அதேசமயம் தனியார் பேருந்துகள் கிட்டத்தட்ட முழு அளவில் ஓடவில்லை.
புதுச்சேரியில் இயல்பு நிலை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் அங்கு நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications