நெல்லையில் லேசான நிலஅதிர்வு: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் விரிசல்
நெல்லை: நெல்லையை அடுத்த புளியங்குடியை அடுத்த தலைவன்கோட்டையில் இன்று அதிகாலையில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடகரை, அச்சன்புதூர், வாவா நகரம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 16ம் தேதி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 25 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.
இதில் தலைவன்கோட்டையை அடுத்த நவநீதகிருஷ்ண நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கருத்தபாண்டியனின்(60) வீ்ட்டில் விரிசல் ஏற்பட்டது. இன்று அதிகாலை 1 மணியளவில் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கருத்தபாண்டியன், வீட்டில் உள்ள பொருட்கள் விழுந்த சத்தம் கேட்டு எழுந்தார்.
அப்போது நிலஅதிர்வு ஏற்படுவதை உணர்ந்த அவர், உடனடியாக குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். நிலஅதிர்வில் கருத்தபாண்டியனின் வீட்டு தரை, சுவர் மற்றும் கழிப்பறை ஆகிய இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது. மற்றபடி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
நிலஅதிர்வு அதிகாலையில் ஏற்பட்டதால், தூக்கி கொண்டிருந்த பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications