தர்மபுரியின் வேடந்தாங்கல் ராமக்காள் ஏரி

தர்மபுரி அருகே உள்ளது ராமக்காள் ஏரி. அங்கு தற்போது ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன. மஞ்சள் மூக்கு நாரை, சின்னக் கொக்கு, சிறிய பச்சி கொக்கு, கறுப்பு மூக்கு நாரை, செங்கால் நாரை, நத்தைக்கூடை நாரை, நீர்க் கோழி உள்ளிட்ட பறவைகள் ஏரியில் காணப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீள வால் இலைக் கோழி பறவைகள் வந்துள்ளன.
ராமக்காள் ஏரி தவிர்த்து அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் நீள வால் இலைக் கோழிகள் முகாமிட்டுள்ளன. இந்த பறவைகள் இந்தியாவில் கேரளாவிலும், அஸ்ஸாமிலும், அண்டை நாடான இலங்கை, மியான்மர், தென் சீனா மற்றும் மலேசியாவிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் காணப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தின் வேடந்தாங்கலாக இருக்கும் ராமக்காள் ஏரிக்கு பல்வேறு வகை பறவைகளும் வந்துபோக ஏற்ற சூழலை மாவட்ட நிர்வாகம் உருவாக்கித் தர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கான்கிரீட் காடாக நகரங்கள் மாறி வரும் வேளையில் இதுபோன்று ஏரிகளில் பறவைகள் வந்து முகாமிடுவதைக் காண கண் கோடி வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications