உ.பி. முதல்வருடன் மேரிலாண்ட் அமைச்சர் சந்திப்பு!

மேரிலாண்ட் - உ.பி சகோதர உறவு
அமெரிக்காவின் மேரிலாண்ட் அரசுடன், உத்தர பிரதேச மாநிலம் நேரடி அரசு முறை உறவை ஏற்படுத்துவதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையே கல்வி, மருத்துவம், கட்டமைப்பு, தொழில், வர்த்தக உறவுகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சோலார், சோலார் தெர்மல், பயோ டெக்னாலாஜி உள்ளிட்ட உயர்தொழில் நுட்பம், போக்குவரத்து சீரமைப்புத் திட்டங்கள், கல்வித் திட்டங்கள், மருத்துவத்துறை, அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேரிலாண்டின் புதுமைத் தொழில் நுட்பங்களை , உ.பி யின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விவாதித்தனர்.
உத்தர பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக, அரசு-தனியார் கூட்டு முதலீடுகள் மூலம் கல்வி, எரிசக்தி, மருத்துவத்துறைகளில் உள்ள வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
அத்துடன், இந்த துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் டாக்டர் ராஜனிடம், அவர் கேட்டு அறிந்து கொண்டார். மேரிலாண்ட் அரசுடன் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியங்களையும் அகிலேஷ் கவனத்தில் எடுத்துக் கொண்டார்
மார்ச்சில் மேரிலாண்ட் செல்லும் அகிலேஷ்
மேரிலாண்ட் கவர்னர் மார்டின் ஒ'மைலி யின் இந்திய பயணத்தின் போது உடன்பாடான திட்டங்கள் குறித்தும் அகிலேஷிடம், டாக்டர் ராஜன் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் தொழில், வர்த்தக, தொழில் நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் நேரடி முதலீடுகள் குறித்தும் விவரித்தார்.
கவர்னரை சந்திக்க மேரிலாண்டிற்கு வருமாறும் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, டாக்டர் ராஜன் நடராஜன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அகிலேஷ், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மேரிலாண்ட் வருவதாக உறுதியளித்துள்ளார்.
கவர்னர் - முதல்வர் சந்திப்பின் போது உத்தர பிரதேசம் மற்றும் மேரிலாண்ட் மாகாணங்களுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவே டாக்டர் ராஜனின் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
டாக்டர் ராஜன் நடராஜனுக்கு பாராட்டு
முன்னதாக, இந்தியாவின் இளம் முதல்வராக, அதுவும் மிகப்பெரிய மாநிலத்திற்கு பொறுப்பேற்றுள்ள அகிலேஷ் யாதவுக்கு, டாக்டர் ராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர் ராஜனை வரவேற்ற முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது முக்கிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்காவில் உயர் அரசியல் பதவி வகிக்கும் முதல் இந்தியரான டாக்டர். ராஜனின் சாதனை குறித்து பெருமைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதிபர் ஒபாமாவுக்காக, அமெரிக்க தேர்தல் களத்தில், முக்கிய குழுவில் மிகவும் பிஸியாக இருக்கும் இந்த நேரத்திலும், தங்கள் மாநிலத்திற்கு வருகை தந்ததற்காக அகிலேஷ் யாதவ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர் ராஜனின் அவசர அலுவல்களைப் புரிந்து கொண்டு, சந்திப்பிற்கான நேரத்தையே ஒரு நாள் முன்கூட்டியே வைத்துக் கொண்டார் அகிலேஷ் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications