ரூ.300 கட்டணத்தில் நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள்: அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
நெல்லை: புரட்டாசி சனிக்கிழமையை ஓட்டி நவதிருப்பதி கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் வரும் 4 சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களை பக்தர்கள் தரிசிக்க வசதியாக இன்று 22ம் தேதி துவங்கி, வரும் 29ம் தேதி, அக்டோபர் 6, 13 ஆகிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் அடுத்த 4 சனிக்கிழமைகளிலும் காலை 7 மணிக்கு நவதிருப்பதி கோயில்களுக்கான சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
நவதிருப்பதி தலங்களாக ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருபுளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, மற்றும் புன்னையடி வனத்திருப்பதி கோயில், கருங்குளம், நாங்குநேரி, திருகுருங்குடி சென்று இரவு நெல்லை புதிய பஸ் நிலையம் வந்து சேரும் வகையில் இவை இயக்கப்படுகின்றன. கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டண தொகையை செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications