25ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் கூடங்குளம் போராட்டக்காரர்கள்
நெல்லை: வரும் 25ம் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக எதிர்ப்புக்குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 12ம் தேதி அன்று அணு உலை முற்றுகை போராட்டம் வலுவடைந்து பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகி தடியடி, துப்பாக்கிச்சூடு வரை சென்று அதில் ஒரு மீனவர் பலியானார். இரண்டாம் கட்ட போராட்டமான ஜலசந்தி
போராட்டத்தில் விமானப்படை விமானம் தாழ்வாக பறந்து விரட்டியதில் சகாயராஜ் என்ற மீனவர் பாறையில் தவறி விழுந்து பலியானார்.
இரண்டு உயிர்களை காவு வாங்கிய பின்னரும் எதிர்ப்புக்குழுவினர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து சென்று வருகிறார்களே தவிர அதில் இருந்து பின் வாங்குவதாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 22ம் தேதி தூத்துக்குடி துறைமுத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். ஒவ்வொரு போராட்டத்திலும் 5,000 முதல் 10,000 மீனவர்கள் வரை பங்கெடுத்து வருகின்றனர்.
தற்போது வரும் 25ம் தேதி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தினை நடத்த உள்ளனர். அதற்காக நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அணு உலை எதிர்ப்பாளர்களை அக்குழுவினர் ஒருங்கிணைத்து வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் கல்லறைகளில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளனர்.
வரும் 24-10-2012 அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் முன்பும் போராட்டத்தை நடத்திட இப்போதே சமூக வலைத்தளங்கள் மூலம் கூடங்குளம் எதிர்ப்புக் குழு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications