காவிரியில் தண்ணீர் விட மறுத்த கர்நாடகம் மீது வழக்குத் தொடர ஜெ. உத்தரவு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
19.9.2012 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி நிலைமையை விரிவாக எடுத்துக்கூறி, இடர்ப்பாடு பங்கீட்டு முறையின்படி குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு காவேரி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும், பிரதமர் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வீதம், அதாவது முக்கால் டி.எம்.சி. அடி தண்ணீரினை 20.9.2012 முதல் 15.10.2012 வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும், இதனையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டுவசதித் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், காவேரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகம் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவினை உடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முதல்வ ஜெயலலிதா உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications