மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி அக். 2ல் வைகோ உண்ணாவிரதம்

இது குறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது :
தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு ஒயின்ஷாப்களும், பார்களும் திறந்திருப்பதால் பெரியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்களும், பள்ளிமாணவர்களும் சீரழிவுக்கு ஆளாகிவருகின்றனர். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக சீர்கேடுகள் நடைபெறுகின்றன.
இன்றைக்கு இளம் தலைமுறை பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மதுவில் இருந்து தமிழ்நாட்டை மீட்காவிட்டால் நமது சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
மதுக்கடைகள் மட்டுமல்லாது புதிதாக எலைட் பார்களை திறப்போம் என்று கூறி வரும் அரசு மதுக்கடை வருமானத்தின் மூலம் இலவசங்களை வழங்குகிறது. இதனால் தமிழக மக்களை உழைப்பற்றவர்களாக மாற்றியதில் திமுக, அதிமுக அரசுக்கு முக்கிய பங்குண்டு. எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 2 ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மறைமலைநகரில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நவம்பர் 6 ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டமும், மூன்றாவது கட்டமாக டிசம்பர் 12 ம் தேதி நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை 400 கிராமங்கள் வழியாக மதுவிலக்கு பிரச்சார நடைபயணம் வைகோ தலைமையில் நடைபெறுகிறது. டிசம்பர் 25 ம் தேதி இந்த பயணம் மதுரையில் நிறைவடைகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications