பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்து கொண்டிருந்த சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
ரயிலின் என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இருப்பினும் இதில் உயிர்ப்பலி எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூரிலிருந்து இந்த ரயில் கிளம்பி வந்தபோது முகல்புரா என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்து நிறுத்தினர்.
இந்த ரயிலில் சம்பவத்தின்போது 312 பயணிகள் இருந்தனர். உடனடியாக மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications