நான் ஆண்மையற்றவனா!.. வேதனையில் பேராசிரியர் தற்கொலை
திருவள்ளூர்: தான் ஆண்மையற்றவர் என்று கூறியதால் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அவரது தாயார் திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பிரேம்நகரை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகன் அருண்குமார். 28 வயதாகிறது. அமுதா என்ற மகளும் உள்ளார். அருண்குமார் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
அருண்குமாருக்கு வயதாகிக் கொண்டு வந்ததால் பெண் பார்த்து வந்தனர். இதையடுத்து அருண்குமார் தான் இல்லற வாழ்க்கைக்கு பொருத்தமானவனா என்பதை அறிய டாக்டரிடம் சென்றார். அங்கு அவர் மருத்துவப் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் அளவுக்கு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சியும், வேதனையும் அந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் அங்கு தனது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினார். பின்னர் தான் வாங்கி வந்த மதுவில் விஷத்தைக் கலந்து குடித்து விட்டார். சிறிது நேரத்திலேயே அருண்குமார் பிணமானார்.
வெளியில் போயிருந்த அருண்குமார் பெற்றோர், வீடு திரும்பியபோது மகன் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து கதறி அழுதனர். பின்னர் அருண்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தனர். அதில், அம்மா எனக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நீங்கள் பெண் பார்த்து கொண்டிருப்பதால் நான் ஆஸ்பத்திரிக்கு சென்று என் உடலை பரிசோதனை செய்தேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று கூறியதால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இதனால் வாழ்வதைவிட சாவதே மேல் என இந்த முடிவுக்கு வந்தேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதியிருந்தார் அருண்குமார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications