சென்னையில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உயிர் ஊசல்
சென்னை: சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 24வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை 8 மணி அளவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டுக்குள் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய 4 பேரை மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காலையில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications