தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜ் குடும்பத்திற்கு வைகோ நிதி உதவி
சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் கடந்த 17 ம் தேதி, ராஜபக்சேவின் வருகையை கண்டித்து அதிகாலை வேளையில் தீக்குளித்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்கள் சேலம் சென்று விஜயராஜ் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து மத்தியபிரதேச மாநிலம் சென்று மூன்று நாட்கள் போராட்டம் நடத்திய வைகோ ஞாயிறன்று சென்னை திரும்பினார். அண்ணா சதுக்கம் சென்று அஞ்சலி செலுத்திய வைகோ அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசினார். பின்னர் திங்கட்கிழமை சேலம் வந்த வைகோ ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து உயிரிழந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடைய குடும்பத்தினருக்கு 2,25000 ரூபாய் நிதி உதவி அளித்தார். வைகோ உடன் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.













Click it and Unblock the Notifications