ஸ்பெக்ட்ரத்துக்கு மட்டுமே ஏலம்.. மற்ற இயற்கை வளங்களுக்கு அல்ல: சுப்ரீம் கோர்ட் விளக்கம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு மட்டும் ஏலம் முறை பின்பற்றப்பட வேண்டும். மற்ற இயற்கை வளங்களுக்கு ஏலம் முறை பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. .
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 122 நிறுவனங்களின் உரிமங்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருந்தது. மேலும் ஏலம் மூலமே ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை பின்பற்றுவது தொடர்பாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மூலம் உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கோரியது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது இம்மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தரப்பு வாதிட்டது. மத்திய அரசின் சார்பில் ஆஜராகியிருந்த வானாவதியோ, மத்திய அரசு கோரியபடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர் வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் மனு மீது இன்று பதிலளித்த நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு மட்டும்தான் ஏலம் முறை பின்பற்றப்பட வேண்டும். மற்ற இயற்கை வளங்களை ஏலம் விடும்போது அரசின் வருவாயை விட மக்களின் நலமே முக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறினர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications