'சீட்டு' வாங்கித்தர 'நோட்டு' வாங்கிய சாத்துரார் பலே பட்டை நாமம்! கோர்ட்டில் திமுக தொண்டர்!
சென்னை: இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது.. இதுவெறும் திரைப்பட வசனமல்ல என்பது திமுக தலைவர் பராசக்தி படத்திற்காக எழுதிய வசனம். இதனை நிரூபிக்கும் வகையில் நிஜமாகவே திமுக தொண்டர் ஒருவர் விசித்திர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்த கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விவரம்:
1984 முதல் நான் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட விரும்பினேன். இதற்காக கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்தேன். ஆனால் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்பப் பெறக் கோரினேன். ஆனால் சாத்தூரார் தர மறுப்பதுடன் மிரட்டல் விடுக்கிறார்.
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சாத்தூர் ராமச்சந்திரனைக் கண்டித்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் எதிரில் வரும் 5-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை போலீசில் விண்ணப்பித்தேன். ஆனால் போலீசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறபட்டது.
இந்த மனு நேற்று என்.பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இம் மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications