சென்னை மாநகராட்சியில் 'மு.க.ஸ்டாலின் தொகுதியால்' அமளி- திமுகவினர் வெளிநடப்பு
சென்னை: மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சமுதாய நலக் கூடத்தை போலீஸ் நிலையத்துக்கு ஒதுக்குவதற்கான தீர்மானத்தைக் கண்டித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அமளி
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது துணை மேயர் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கு இடையே 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது மேயர் சைதை துரைசாமி மன்றத்துக்குள் நுழைந்தார். 34 முதல் 36 வரையிலான தீர்மானங்கள் மீது விவாதம் நடத்த அவர் அனுமதித்தார். ஆனால் இதனை திமுகவின் ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு ஏன்?
வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் திமுகவின் சுபாஷ் சந்திரபோஸ் கூறியதாவது:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பழமையான சமுதாய நலக்கூடத்தை இடித்துவிட்டு, புதிய சமுதாய நலக்கூடம் கட்ட ரூ1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஆனால் இதை அறிந்து கொண்ட அதிமுகவினர், அந்த சமுதாய நலக்கூடத்தை வேண்டுமென்றே போலீஸ் நிலையம் கட்ட ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே வெளிநடப்பு செய்தோம் என்றார் அவர்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications