என்ன பேசுவது? எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது?- கருணாநிதி கேள்வி!

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடே இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது. ஏழையெளிய நடுத்தர மக்கள், ஏன் - வசதி வாய்ப்புள்ளவர்கள்கூட வரலாறு காணாத மின் வெட்டினால் படுகின்ற அல்லல் கொஞ்சம் நஞ்சமல்ல! இந்த இருண்ட இழிநிலைக்கு திமுகதான் காரணம் என்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஜெயலலிதா திசை திருப்பும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறார்.
அனுதாபம் கூறி - நடந்தவைகளை இடித்துக் காட்டி - இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக இருப்பதற்கு ஆலோசனை கூற வருகிறவர்களைக்கூட அவமதிப்பதும்;
இரக்க உணர்வோடு ஆறுதல் கூற வருபவர்களையும், கடந்த காலத் தவறுகளைச் சுட்டிக்காட்டி இனி அவ்வாறு எதுவும் நடந்திடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையை அறிவுரையாகக் கூறினால்கூட, சல்லடம் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருபவர்களிடம்; என்ன பேசுவது? எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? இந்த நிலையில் என்ன பேசுவது? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் - எப்படிப் பேசுவது என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் - சும்மா இருப்பதே சுகம் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும்.
எனினும், நம் தமிழ்நாட்டு மக்களின் தவிப்பு - அவர்களை வாட்டி வதைக்கும் இருட்டு - வாய் பிளந்து நிற்கும் பசி, பஞ்சம், பட்டினி என்ற வேதனையான கொடுமைகள் - இவற்றிலிருந்து நாமும் தமிழர்கள் என்ற காரணத்தால் - இன்னமும் நம்மை நம்பியிருக்கிற தமிழர்களை நினைத்து நினைத்து நெஞ்சுருக - சிலவற்றைச் சொன்னால் அந்த நெஞ்சிலேயே - நெடிய வாளால் -ஈட்டியால் குத்துகிற வகையில் அல்லவா; அறிக்கையும் இருக்கின்றன.
தமிழக உழவர்களின் தவிப்பைப் போக்கிட - தானியக் களஞ்சியங்கள் தரிசு நிலங்களாகி விடாமல் தடுத்திட - உரிய வழி என்ன - உகந்த முறை என்ன என்பது பற்றி ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவெடுக்கவே இயலாமல்; அறிக்கை வாசகங்கள் அணுகுண்டுகளாகச் சிதறி வெடிக்கின்றன!
இல்லாததும், பொல்லாததும் கூறி எதிர்க் கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்கு முற்படாமல் இனியாவது தான் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் - மக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் என்பதை உணர்ந்து - தெளிந்து உதவிட முன்வருவாரா? என்று தமிழக மக்கள் தாங்கொணா துயரத்தோடு ஒலி எழுப்பும் இந்த நேரத்திலாவது - தமிழர்களின் கஷ்டத்தை உணர்ந்து - சிறியதோர் வெளிச்சத் துளி கிடைப்பதற்குப் பாடுபட முன்வருவாரா? பணியாற்றக் கிளம்புவாரா? இந்தக் கேள்விகள்தான் அவருடைய அறிக்கைக்கு பதிலாக அமைகின்றன என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மின்வெட்டு, கூடங்குளம் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை உள்ளிட்டவற்றில் திமுக தலைவர் கருணாநிதி தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்து வருகிறார் என்று கடுமையாக சாடி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications