நாகர்கோவில் அருகே கிணற்றுக்குள் அழுகிய நிலையில் கிடந்தது மாயமான போலீஸ்காரர் உடலா?
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்தானா என அவரது மனைவி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
நாகர்கோவிலை அடுத்த ராஜக்காமங்கலம் அருகே உள்ள பத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். நெல்லை மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தார். அவரது மனைவி தங்கராணி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தங்கராணி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் ஜெகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 23ம் தேதி ராஜக்காமங்கலம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இளைஞர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அது ஜெகநாதன் தான் என உறுதிசெய்ய முடியவில்லை. உடல் மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. இன்னும் 45 நாளில் இதன் முடிவு வெளிவரும்.
இந்நிலையில் தங்கராணி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடும்பத் தகராறில் நான் கொடுத்த புகாரின் பேரில் எனது கணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மாயமான தகவல் 15 நாட்களுக்கு பிறகே தெரியும். கிணற்றுக்குள் கிடந்த உடல் எனது கணவராக இருக்கக் கூடாது. எனது கணவர் இறக்க வாய்ப்பு இல்லை. எனது மாமியாரின் நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கூட மறைத்து வைத்து இருக்கலாம். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக நான் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க இருக்கிறேன். எனது கணவர் திரும்பி வந்தால் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications