சேலத்தில் தாய்- மகளை பட்டப் பகலில் கொன்று 100 பவுன் நகை கொள்ள
சேலம்: சேலத்தில் பட்டப் பகலில் தாய், மகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த 100 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை நாகையர் தெருவை சேர்ந்த சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ராணி தமது மகள்களுடன் மாமனார் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். நேற்று மாமனார், ராணி மற்றும் மகள் சங்கீதா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். ராணிக்கு அவரது உறவினர்கள் பல முறை போன் செய்துள்ளனர். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. இதனால் அவரது உறவினர் ராஜாராம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராணியும், சங்கீதாவும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருவரின் கழுத்தில் இருந்த நகைகளும், வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுனுக்கும் மேலான நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது 89 வயது மாமனார் ராமச்சந்திரன் இருந்துள்ளார். காது மற்றும் கண்பார்வை குறைபாடுடையவர் என்பவரால் இதனை அவரால் உணரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை ராணியின் வீட்டுக்கு வெள்ளை பையுடன் வந்த 4 பேர்தான் கொலைகாரர்களாக இருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் நகரத்தில் பகல் நேரத்திலேயே நகைகளுக்காக தாய்- மகள் கொல்லப்பட்டிருப்பது இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராணியின் வீட்டுக்கு நேற்று பகலில் வெள்ளை பையுடன் 4 பேர் வந்ததாகவும், நகை, பணத்திற்காக ராணி, சங்கீதா ஆகியோரை அவர்கள் தான் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலத்தில் பட்டப்பகலில் தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 100 பவுன் நகை திருட்டு
இதேபோல சென்னை கொடுங்கையூரில் ஒரு வீட்டில் புகுந்த திருடர்கள் 100 பவுன் நகையைக் கொள்ளையடித்து விட்டனர்.
கொடுங்கையூரில் வசித்து வரும் அந்தோணி ராஜ் என்பவர் பாரிமுனையில் கேமராக்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார். நேற்று காலை அந்தோணிராஜ் வழக்கம் போல் கடைக்குச் சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் மனைவி மரிய கிறிஸ்டி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்று விட்டார். மாலை 6 மணிக்கு மரிய கிறிஸ்டி வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
அப்போது அவர் வீட்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் வெளிக்கதவு தாழ்ப்பாளை ரம்பத்தால் அறுத்திருந்தனர். உள்ளே போனபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகை, ரூ. 60 லட்சம் பணம் ஆகியவற்றைக் காணவில்லை.
இந்தத் துணிகர பயங்கரக் கொள்ளை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications