இடிந்தகரையில் மணலில் புதைந்தும், கழுத்தளவு கடலில் நின்றும் வைகோ போராட்டம்
அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வரும் நிலையில் அணுஉலைக்கு எதிரான போராட்டமும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பட்டினிப் போராட்டம், முற்றுகை என போராடிய மக்கள் கல்லறைகளில் குடியேறியும், கழுத்தளவு மணலில் புதைந்தும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று இடிந்தகரைக்கு சென்று போராட்டக்குழுவினரை சந்தித்துப் பேசினார்.
15 நாட்களுக்குப் பின்னர் உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட போராட்ட குழு தலைவர்கள் வைகோவுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கடற்கரையில் கழுத்தளவு மணலில் புதைந்து போராட்டம் நடத்திய குழுவினருடன் வைகோவும் மணலில் புதைந்து பங்கேற்றார்.
ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களும், பெண்களும் மணலில் புதைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் பேசிய வைகோ, கூடங்குளம் அணுமின் நிலையம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இடிந்தகரையில், ஓராண்டுக்கும் மேலாக அமைதி வழியில், அறவழியில், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர். இம்மாதிரி ஒரு போராட்டம், ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடினர். அவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையை கையாண்டு தடியடி நடத்தியுள்ளது. இந்த போராட்டம் அணுஉலையை மூடும் வரை தொடரும் என்றார்.
அதன் பின்னர் கடற்படை விமானம் தாழ்வாக பறந்ததில் உயிரிழந்த மீனவர் சகாயம் குடும்பத்தினருக்கு 50000 ரூபாய் நிதியையும் வைகோ வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து கழுத்தளவு கடல் நீரில் நின்றும் அவர் போராட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய உதயகுமார், வியாழக்கிழமை மாலை இடிந்தகரையில் அணு சக்திக்கு எதிரான அனைத்து அரசியல் இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து பேசி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்













Click it and Unblock the Notifications