மேனேஜருடன் உறவு வைத்துக் கொண்ட பெண் ஊழியர்.. இங்கிலாந்தைக் கலக்கிய இமெயில்!

இந்த விவகாரம் தற்போது டிவிட்டர் மூலமும் பரவி உலகம் பூராவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
லண்டனைச் சேர்ந்த பிரபலமான விளம்பர நிறுவனம் எம்இசி. இந்த நிறுவனத்தின் பெண் ஊழியரும், அதன் மேலாளரும்தான் இப்போது பாலியல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதுநிலை அக்கவுண்ட்ஸ் மேலாளராக இருப்பவர் கீரன் ஆலன். இவர்தான் மெயில் அனுப்பியவர் ஆவார். இதுகுறித்து அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், எம்இசி நிறுவனத்தின் மேலாளர் கிரேக் ஷிக்கில், வேலைக்காக இன்டர்வியூவுக்கு வந்த ஒரு பெண் ஊழியரை இன்டர்வியூ முடிந்ததும் மது அருந்த அழைத்துச் சென்றார். பின்னர் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அங்கு 3வது மாடியில் உள்ள மீட்டிங் அறை ஒன்றுக்குக் கூட்டிச் சென்று அவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டார் என்று கூறியிருந்தார்.
இந்த இமெயில் எம்இசி நிறுவன ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஷிக்கிலுக்கு கீழே 30 பேர் கொண்ட ஒரு டீம் உள்ளது. எனவே அதில் உள்ள ஒரு பெண்ணுடன்தான் அவர் உறவு கொண்டிருக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கிடையே பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் அநத்ப் பெண் யார் என்பதும் பின்னர் தெரிய வந்தது. அவரது பெயர் ஷானா பியூடட். 25 வயதான இவருடன்தான் ஷிக்கில் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதை பியூடெட் மறுத்துள்ளார். நான் ஷிக்கிலுடன் படுக்கவில்லை. அவருக்கு முத்தம் மட்டுமே கொடுத்தேன். அது கூட பொருத்தமற்றது என்று பின்னர் நினைத்துக் கொண்டேன். நான் ஷிக்கிலுடன் பப்புக்குப் போனதும் கூட வேலை நிமித்தமாகத்தான். போகும்போது நான் ஒரு முத்தம் கொடுத்தேன், அவ்வளவுதான், வேறு ஒன்றும் நடக்கவில்லை. மேலும் நாங்கள் இருவருமே சிங்கிளாக இருப்பவர்கள்தான். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்ல என்றார். பியூடெட் கனடாவைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும் அவர் கூறுகையில், நானும் அந்த இமெயிலைப் படித்தேன். என்னைப் பற்றி ஆலன் எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இதையடுத்து ஷிக்கிலைத் தொடர்பு கொண்டு நாம் உறவு கொள்ளவில்லை என்று விளக்கம் கொடுங்கள் என்று கூட கேட்டுக் கொண்டேன் என்றார்.
இந்த விவகாரம் தற்போது டிவிட்டரில் பரவி இன்டர்நெட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications