இளைஞர் காங். தேர்தல்: வாசன் ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வெற்றி-2வது இடம் கார்த்திக்கு!
சென்னை: பெரும் களேபரங்களுக்கு இடையே நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநிலம் முழுவதும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசனினி ஆதரவாளர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
முதல் கட்டமாக 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் வாசன் ஆதரவாளர்களே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 22 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கார்த்தியின் ஆதரவாளர்கள் 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் பதவிகளைக் கைப்பற்றி உள்ளனர்.
அதே போல பிரபு ஆதரவாளர்களும், மாணிக்கம் தாகூர், இளங்கோவன், தங்கபாலு ஆதரவாளர்கள் ஒரு சில தொகுதியை கைப்பற்றி உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி அளவிலும் அதிக தொகுதிகளை வாசன் ஆதரவாளர்களும், அதற்கு அடுத்ததாக கார்த்தி ஆதரவாளர்களும் கைப்பற்றி உள்ளனர். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மரணம் அடைந்ததால் திருச்சி தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று தான் நடக்கவுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications