பாகிஸ்தானில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி 422 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பருவ மழையின் போது, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 422 பேர் பலியாகி இருப்பதாக தேசிய இயற்கை சீரழிவு தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மழையினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 50 லட்சம் பேரில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக மழை வெள்ளத்தில் சிக்கி 239 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 443 பேர் பலியாகினர். அதேபோல கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1,985 பேர் பலியானாதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யூனிசெப் அமைப்பு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, மற்ற நாடுகள் உதவிகரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பருவ மழை இன்னும் 3 மாதங்கள் வரை தொடரலாம் என்பதால், இந்த ஆண்டு மழை வெள்ளத்தில் இன்னும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சப்படுகிறது.
பாகிஸ்தானில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications