நெல்லையில் மழை வேண்டி 3 நாள் சிறப்பு தொழுகை
நெல்லை: செங்கோட்டையை அடுத்த வடகரையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் மழை வேண்டி 3 நாள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது.
விவசாயத்திற்கு பெயர் பெற்ற மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதுடன் தற்போது வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்காமல் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்களும் ஆங்காங்கே மழை வேண்டி அவரவர் மத நம்பிக்கைகளின்படி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கோட்டையை அடுத்த வடகரையில் முகைதீன் ஆண்டவர் பள்ளி, திப பள்ளி, ரகுமானியபுரம் பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஜமாத் சார்பில் மழை வேண்டியும், நாட்டின் வளர்ச்சிக்காக 3 நாள் நோன்பு இருந்தனர்.
இன்று காலை ரகுமானியபுரம் மணல் விளைதிடலில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். காலை 7 முதல் 9 மணி வரை நடந்த இந்த சிறப்பு தொழுகையை ஒருங்கிணைந்த ஜமா ஆத் தலைவர் அலி தலைமை வகித்தார். இமாம் சாகுல் அமீது ஆலிம் தொழுகை நடத்தினார்.












Click it and Unblock the Notifications