தெலுங்கானா மாவட்டங்களில் முழு அடைப்பு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதாராபாத்; தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியும் போலீசாரின் நேற்றைய தாக்குதலைக் கண்டித்தும் இன்று 10 மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி நேற்று முதல் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நேற்று பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலால் பெரும் வன்முறை வெடித்தது.
நேற்று காலையிலேயே பேரணிக்கு முயன்ற ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மாணவர்களை விரட்டினர். இதேபோல் நேற்று மாலையில் நடந்த பேரணியிலும் வன்முறை வெடித்தது.
போலீசாரின் தாக்குதலைக் கண்டித்து தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த மாவட்டங்களில் பேருந்து மற்றும் வாகனங்கள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. தேர்வுகளும் ஒத்திவக்கப்பட்டுள்ளன.
இதனால் தெலுங்கானா பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications