தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக டிஜிபி ராமானுஜம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது,
மதுரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி மாரிராஜன், சிறப்பு புலனாய்வு பிரிவுற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை டிஎஸ்பி ராமலிங்கம், தஞ்சைக்கும், தஞ்சை டிஎஸ்பி மாணிக்கம், வேலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஊட்டி (புற நகர்) டிஎஸ்பி அனிதா ஊட்டிக்கும், ஊட்டி(நகர்) டிஎஸ்பி ரங்கசாமி திருப்பூர் வடக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளார். சேலம் டிஎஸ்பி மோகன்குமார், ஊட்டி புறநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல தமிழகம் முழுக்க மொத்தம் 14 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications