கடத்தப்பட்ட கோழிப்பண்ணை அதிபரின் மகன் நடு ரோட்டில் மீட்பு
திருப்பூர் பல்லடம் அருகே கோழிப்பண்ணை நடத்தி வரும் பாலு என்பவரின் ஒரு வயது மகன் கடத்தப்பட்டான். இருப்பினும் அவனை 2 மணி நேரத்தில் நடு ரோட்டில் வைத்து போலீஸார் மீட்டனர்.
பல்லடம் அருகேயுள்ள கொடுவாய் நாகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலு. கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மகன் சுதன் பிரசாத். ஒரு வயதாகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பாலுவை தேடி 4 பேர் காரில் வந்தனர். 2 பேர் மட்டும் வீட்டுக்குள் சென்று பாலுவை விசாரித்தனர். அவர் வீட்டில் இல்லை என்று பாலுவின் மனைவி வெண்ணிலா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
அப்போது வீட்டின் முன் பகுதியில் வேலைக்காரப் பெண் சுதன் பிரசாத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று அந்த மர்ம மனிதர்கள் குழந்தையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். குழந்தையை கடத்திய மர்ம மனிதர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு இரவு 7 மணி அளவில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டு நிற்பதை பார்த்த சிலர் குழந்தையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியபோது அது சுதன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பாலுவும், போலீஸாரும் சென்னிமலை போய் குழந்தையை மீட்டுக் கொண்டு வந்தனர். யார் குழந்தையைக் கடத்தியது, ஏன் விட்டுச் சென்றனர் என்பது தெரியவில்லை.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications