மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா-
டெல்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததால் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா அறிவித்துள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததால் திரிணாமுல் காங்கிரஸ் தமது 19 எம்.பிக்களின் ஆதரவை விலக்கிக் கொண்டது. இதேபோல் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு 2 எம்.பிக்கள் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை விலக்கிய போதே மன்மோகன்சிங் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது. தொடர்ந்தும் ஒவ்வொரு கட்சிகளும் ஆதரவை விலக்கிக் கொண்டு வருவதால் காங்கிரஸ் அரசு நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது என்றே கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக மமதா மிரட்டி வருகிறது. கூட்டணியில் இருக்கும் திமுகவோ, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு என்பதற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என்கிறது.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு முழு பெரும்பான்மை இருப்பதாகவே சொல்லுகிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் வேலை வாய்ப்பு எண்ணிக்கையே அதிகரிக்கும். மத்திய அரசு முழு பெரும்பான்மையுடன் இருக்கிறது. அரசு திடமான முடிவுகளை எடுக்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications