ரத்த தானம் செய்வது உயிரை காப்பாற்றும் புனித செயல்: முதல்வர் ஜெயலலிதா

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. ரத்தம் உயிரின் ஆதாரம் ஆகும். எனவே ரத்ததானம் செய்வது உயிரைக் காப்பாற்றும் ஒரு புனிதமான செயலாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சென்ற ஆண்டு தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு என்ற அளவுக்கு ரத்த அலகுகளை தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் மூலம் பெற்று இந்தியாவிலேயே, தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் ரத்த தான முகாம்களில் தற்போது அதிநவீன மற்றும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 3 நடமாடும் ரத்த சேகரிப்பு வங்கிகளைப் பயன்படுத்தி ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள ரத்த வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது.
3 மாத இடைவேளையில் ரத்த கொடையாளரிடம் இருந்து பெறப்படும் ரத்தம் முற்றிலும் பாதுகாப்பானது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு ஆண்டுதோறும் 3 முறை ரத்த தானம் செய்த ஆண்களுக்கும், 2 முறை ரத்த தானம் செய்த பெண்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.
தமிழகத்தில் தானாக பெறப்படுகின்ற மொத்தம் ரத்த அலகுகளில் 99 விழுக்காடு ரத்த அலகுகள் தன்னார்வ ரத்த கொடையாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது என்பது பாராட்டுதலுக்குரியது.
மேலும் மகப்பேறு காலங்களில் கிராமப்புறங்களிலும் ரத்த இழப்பால் ஏற்படும் உயிர் இழப்பை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு தேசிய ஊரக நலக்குழுமம் மூலம் 231 ரத்த சேமிப்பு மையங்களை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் முதல் நாள் அன்று, அனைவரும் ரத்த தானம் செய்து மனித உயிர்களைக் காப்பாற்ற உறுதி ஏற்கவும், நடப்பு ஆண்டில் தமிழகம் தன்னார்வ ரத்த தானத்தில் 100 விழுக்காடு என்ற இலக்கை அடையவும் பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications