ஒருவரை மணந்த 3 சகோதரிகள்... கணவரை சமாளிக்க முடியாமல் பிக்பாக்கெட் ராணிகளாக மாறினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நபரை மணந்த 3 சகோதரிகள், கணவரின் பெண் பித்தால் வெறுத்துப் போயும், வாழ்வதற்கு வழி இல்லாததாலும் பிக் பாக்கெட்காரிகளாக மாறி சென்னைக்கு வந்து பிக்பாக்கெட் அடித்து போலீஸில் சிக்கினர்.

சென்னை அயனாவரம் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் கனகவள்ளி. 23 வயதான இவர் பாரிமுனைக்கு ஷாப்பிங் போனார். ஷாப்பிங்கை முடித்து விட்டு வீட்டுக்கு பஸ்சில் திரும்பினார். அப்போது ஒரு பெண், கனகவள்ளியின் பர்ஸை பறித்துக் கொண்டு ஓடினார். இதையடுத்து அப்பெண்ணை மற்ற பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.

இந்த நிலையில் அதே பஸ்சில் பயணித்த 2 பெண்கள், பிடிபட்ட பெண்ணை மீட்க போராடினர். இதையடுத்து அவர்களையும் பயணிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் 3 பேரும் சகோதரிகள் என்று தெரிய வந்தது.

அவர்களது பெயர் 26 வயது அலமேலு, 24 வயது துர்கா, 22 வயது திவ்யா என்றும் தெரிய வந்தது. இவர்கள் திருத்தணியைச் சேர்ந்தவர்கள். மூன்று பேருக்கும் ஒரே கணவர்தான். மூன்று பேரையும் மணந்த அந்த நபர் ஒரே வீட்டில் குடித்தனமும் நடத்தி வந்துள்ளார்.

மூன்று பேரையும் அந்த நபர் செக்ஸ் அடிமைகள் போல நடத்தி வந்தாராம். மேலும் 4வதாக ஒரு பெண்ணை மணக்கவு்ம் ரூட் விட்டுக் கொண்டிருந்தார். இதனால் வெறுத்துப் போன இந்த மூன்று பெண்களும் வீட்டுச் செலவுக்குப் பணம் இல்லாததால் பிக்பாக்கெட்டில் குதித்துள்ளனர். அடிக்கடி சென்னைக்கு வந்து பிக்பாக்கெட் அடித்து விட்டுப் போய் விடுவார்களாம்.

ஓடும் பஸ், ரயில் ஆகியவற்றில்தான் இவர்கள் திருடுவார்களாம். யாராவது பிடிபட்டால் மற்ற இருவரும் பொதுமக்கள் போல சண்டை போட்டு சிக்கியவரை மீட்டுச் சென்று விடுவார்களாம்.

3 பேரையும் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் நிறுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+