சென்னையில் 2 மாடி வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் பலியானார்கள். அதில் குடியிருந்த 7 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. விபத்தில் சிக்கிய வீடு மிகவும் பழமையானது. மேலும் 50 வருடங்களுக்கு முன்பு மண்ணால் கட்டப்பட்டதாகும். பாழடைந்து போயிருந்த அந்த வீட்டில் 25க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர் என்பதால் உயிரிழப்பு அதிகமாகுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளம் தோண்டியதால் விரிசல்
அதற்காக வீட்டை சுற்றி பில்லர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பள்ளம் தோண்டியபோது, தியாகராஜன் வீட்டு கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன சிலர், வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டனர். தியாகராஜன் உள்பட 7 குடும்பங்கள் மட்டும் வசித்து வந்தன.
இதனிடையே இன்று காலை 7.30 மணிக்கு, தியாகராஜன் வீடு இருந்த கட்டிடம், திடீரென இடிந்து பக்கத்தில் இருந்த அச்சகம் மீது விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து பதறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் வசித்து வந்த 7 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் மஞ்சு, பாரதி ஆகிய இருவரும் பலியானது உறுதி செய்யப்பட்டது. அவர்களது உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. தியாகராஜன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
கட்டிட உரிமையாளர் தியாகராஜனுக்கு துரை என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் துபாயில் வசித்து வருகிறார்கள். சம்பவம் பற்றி துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க கடுமையாக போராடி வருகின்றனர். அவர்களுடன் அந்த பகுதி மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றும் அமிர்தலிங்கத்தின் மனைவி பாரதி (50), மகன் பார்த்தசாரதி (23) ஆகியோரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுகின்றனர். அவர்களை மீட்க மக்கள் போராடி வருகின்றனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 7 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உள்பட 25,க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.
மீட்புப் பணியில் தாமதம்
சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டுச் சென்றார்.
அந்தப் பகுதியில் மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. கட்டிடம் இடிந்து விழுந்த இடம் மிகவும் குறுகலான தெரு என்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியவில்லை. போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் கடப்பாரை, கட்டை, கம்பிகளை பயன்படுத்தி இடிபாடுகளை உடைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவரின் உடல் மீட்பு
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அங்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டது. அது குறுகிய சந்து என்பதால் ஜே.சி.பி. எந்திரத்தால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு படையினர் போராடி ஒரு பெண்ணின் உடலை மீட்டனர். மற்றொரு பெண்ணின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கையாக இடிபாடுகளில் சிக்கியவர்களை அடையாளம் காண மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸூம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications